10ம் வகுப்பு அரசுத்தேர்வில் ஆச்சர்யம்! தந்தையும், மகனும் ஒன்றாக எழுதி ஒரே மார்க்!!

பலசூர்: தந்தையும், மகனும் பத்தாம் வகுப்பு தேர்வை ஒன்றாக எழுதி ஒரே மதிப்பெண் பெற்ற ஆச்சர்ய  சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் பலசூரை சேர்ந்தவர் அருண்குமார்(58). படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் குடும்ப சூழ்நிலையால் பாதியிலேயே படிப்பை விட்டார்இவர் மகன் பிஸ்வாஜித்(30). இவரும் பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுதுவதற்கு முன்னரே வேலைக்கு செல்ல நேர்ந்தது.தந்தையும், மகனும் 10ம் வகுப்பு தேர்வு எழுத திட்டமிட்டனர்.
தகன்புஞ்சி நகரில் உள்ள சைதன்யதேவ் உயர்நிலைப்பள்ளியில் வார இறுதி வகுப்பில் சேர்ந்தனர்.இருவரும் நன்கு படித்து தேர்வு எழுதினர். இருவருமே 500க்கு 342மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களை பள்ளியில் அனைவரும் பாராட்டினர். இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை தொடர இருவரும் விண்ணப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here