ஜேசிபி வாகனம் மீது ரயில் மோதல்! 4பயணிகள் படுகாயம்!!

ஜெய்ப்பூர்: எக்ஸ்பிரஸ் ரயில் ஜேசிபி வாகனம் மீது மோதியதில் 4 பயணிகள் காயமடைந்தனர்.எர்ணாகுளம்-ஹவ்ரா அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் ஜெய்ப்பூர் வழியாக சென்று கொண்டிருந்தது.ஹரிதஸ்பூர் ரயில்வே கேட் பகுதியில் ஜேசிபி எந்திரம் ஒன்று ரயில்பாதையில் நின்றுகொண்டிருந்தது. உஷாரான ரயில் டிரைவர் ரயிலை நிறுத்த முயன்றார்.அதற்குள் ரயில் ஜேசிபி வாகனம் மீது மோதியது. ரயிலில் வந்த 4பேர் காயமடைந்தனர். ரயில்வே கிராசிங்கை இரவில் கடக்க முயன்றபோது ஜேசிபி எந்திரம் ரயில்பாதையில் சிக்கியது.இதனால் அதனை அங்கேயே விட்டுவிட்டு மீட்பதற்கான நபர்களை அழைக்க ஜேசிபி டிரைவர் சென்றுள்ளார்.அதற்குள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here