யானையிடமிருந்து தப்பிய பெண்! பாலத்தின் அடியில் குழந்தைபெற்றார்!!

மயூர்பஞ்ச்: யானைகளிடம் இருந்து தப்பித்துவந்த கர்ப்பிணி பாலத்தின் அடியில் குழந்தை பெற்றார். ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் வனப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.மயூர்பஞ்ச் வனப்பகுதியில் பிரமிளா என்ற பெண் கணவருடன் வசித்துவந்தார்.
யானைகள் அவர் வீட்டை தாக்கி சிதறடித்தன.

இதனால் கணவருடன் தற்காலிகமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையில் அடியில் இருந்த பாலத்தில் குடியேறினார் பிரமிளா.கர்ப்பிணியான அவர் அப்பாலத்தின் அடியிலேயே ஆண் குழந்தையும் பெற்றார்.
வனப்பகுதிக்கு வந்த அதிகாரிகளுக்கு இதுகுறித்து விபரம் தெரியவந்தது.
அவர்கள் பிரமிளா, குழந்தைக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here