வனப்பகுதியில் பீதியை கிளப்பிய டிவி!

ஒடிசா: மரத்தினடியில் கண்டெடுக்கப்பட்ட டிவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநில வனப்பகுதியில் நக்சல்கள், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம்.
அவர்களை தீவிரமாக நக்சல் தடுப்புப்படையினர் கண்காணித்து வருகின்றனர்.மல்கங்கிரி வனப்பகுதியில் தனிப்படையினர் டிவி பெட்டி ஒன்று மரத்தின் அடியில் இருந்ததை கண்டுபிடித்தனர்.அது வெடிகுண்டாக இருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் உஷாராயினர்.வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சுமார் 3மணி நேரம் சோதனை நடந்தது.இறுதியில் அது சாதாரண டிவி என்றும், டிவி பழுதடைந்ததால் வனப்பகுதியில் வசிக்கும் யாரோ ஒருவர் அங்கே விட்டுச்சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here