முதுகெலும்பு முறிந்த பாம்புக்கு சிகிச்சை!

ஹைதராபாத்:பாம்பின் முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆந்திரமாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது ராமச்சந்திரபுரம் கிராமம்.
இங்கு வசித்துவரும் விவசாயி பிரம்மானந்தராவ்.
அவர் வயலில் பாம்பு ஒன்றை பார்த்தார். அதனை பிடிப்பதற்காக அப்பகுதியில் பிரபலமான கிராந்தி சாதலவாதாவை அழைத்தார். அதற்குள் கிராம மக்கள் கற்களால் பாம்பை தாக்கினர்.

முதுகெலும்பில் காயமடைந்த நிலையில் சுருண்டு கிடந்த பாம்பை கிராந்தி சாதலவாதா காப்பாற்றினார்.
மேற்கு கோதாவரியில் உள்ள கால்நடை சிகிச்சை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றார்.
அங்கு பாம்பின் முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்பாம்புக்கு சிகிச்சை முடிந்ததும் வனப்பகுதியில் விடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here