மசாஜ் சென்டரில் பலாத்காரம்! சேலத்தில் 3பேர் கைது!!

சேலம்: மசாஜ் சென்டரில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ராசிபுரம் அனுமந்தபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் சினிமா நகர் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மசாஜ் சென்டருக்கு 10 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது.

 

உள்ளே நுழைந்தவர்கள் உள்பக்கமாக கதவை பூட்டிவிட்டு, வேலைபார்த்து வந்த பெண் அவரது ஊழியர்கள் இருவரை கத்திமுனையில் மிரட்டி 15 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர். இருவரையும் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மசாஜ் சென்டர் உரிமையாளர் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், சேலம் ஜான்சன்பேட்டையை சேர்ந்த கார்த்திக், கூட்டாளிகள் பாலகிருஷ்ணன், விஜயகுமார், விக்னேஷ், உள்ளிட்ட 10 பேர் என தெரியவந்தது.இவர்களில் கார்த்திக், விஜயகுமார்(27), விக்னேஷ்(23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here