உல்லாசத்துக்கு அழைத்து தொழிலதிபர் கொலை! இளம் பெண் நண்பர்களுடன் கைது!!

ஜெய்ப்பூர்: பணக்கார தொழிலதிபர்களுடன் உல்லாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்துவந்த பெண் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.ராஜஸ்தான் ஜெய்ப்பூர் தொழிலதிபர் துஷ்யந்த் சர்மா. இவருடன் மொபைல் டேட்டிங் மூலம் பிரியாசேத் அறிமுகமாகியுள்ளார்.
சர்மா பெரிய தொழிலதிபர் என்பதை அறிந்த பிரியா அவருடன் நெருக்கமாக பழகிவந்துள்ளார்.
சர்மாவைவிருந்துக்கு வீட்டிற்கு அழைத்துள்ளார்.சர்மாவை அறையில் கட்டிப்போட்டு அவரது குடும்பத்தாரிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் பிரியா.
பணம் கிடைக்காததால் சர்மாவை கொலை செய்து சூட்கேசில் அடைத்து சாலையில் வீசிவிட்டு தப்பியுள்ளனர்.இது தொடர்பாக ஜெய்ப்பூர் போலீசர் விசாரணை நடத்தினர் பிரியாவும் அவரது நண்பர்களும் சிக்கினர்.
விசாரணையில் சர்மாவை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
பணத்தாசையால் தனது நண்பர்களுடன் சேர்ந்து டேட்டிங் ஆப் மூலமாக பணக்காரர்களுக்கு வலைவிரித்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பது இக்கும்பலின் வழக்கம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here