மோடியின் பேச்சால் விவசாயி வயிறு நிறையுமா? தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா கேள்வி!

பெங்களூர்: பிரதமர் மோடி சிறப்பாக பேசி நடிக்கிறார். ஆனால் அதனால் நமது வயிறு நிறைந்துவிடுமா என்று வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பினார் சோனியாகாந்தி.கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் 2ஆண்டுக்குப்பின் பொதுமேடையில் பங்கேற்றார் சோனியாகாந்தி.விஜயபுராவில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மாநிலத்தின் வறட்சிக்கு உதவிட பிரதமரை சந்திக்க முதல்வர் சித்தராமையா நேரம் கேட்டார். தரப்படவில்லை. பிரதமர் பேசுகிறார். எல்லோரும் ஒன்றிணைவோம்! எல்லோரும் உயர்வடைவோம்! என்று. எப்படி அதனை ஏற்றுக்கொள்வது?
அவர் நன்றாக பேசுகிறார். தேர்ந்த நடிகரைப்போன்று அவரது நடவடிக்கைகள் உள்ளன.அவர் பேச்சு ஏழைகளின் துயரத்தை போக்கினால் நான் வரவேற்பேன். ஆனால் பேச்சு வயிற்றை நிரப்புமா?
நல்லதிட்டங்களை அமல்படுத்தாவிட்டால் விவசாயிகள் நிலை இன்னமும் மோசமாகும்.
ஊழலை ஒழித்ததாக பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஆனால் நான்கரை ஆண்டுகளாக லோக்பால் அமைப்பை ஏன் அவரால் கொண்டுவர முடியவில்லை. ஊழல்வாதிகளுடன் மேடையில் தோன்றுகிறார்.ஒவ்வொரு மேடையிலும் பொய்யையும், வெறுப்பையும் மக்களிடம் விதைப்பதற்காக பயன்படுத்துகிறார்.
கர்நாடக மக்கள் அவரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here