இறுதிவரை போராடி தோற்றது பஞ்சாப் அணி!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.அந்த அணியின் ரகானே, ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ரகானே 9 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதம் 8 ரன்னில் வெளியேறினார்.
பட்லர் அதிரடியாக விளையாடி 58 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார்.சஞ்சு சாம்சன் 22 ரன்னும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னும் அடித்தனர்.
20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் ராஜஸ்தான் அணி எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியில் ராகுல், கெய்ல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.கெய்ல், அஸ்வின் ஆகியோர் விக்கெட்டுகள் அதிரடியாக கவுதமால் பறிக்கப்பட்டன.
5ஓவர் முடிவில் 3விக்கெட் இழப்புக்கு 25ரன் எடுத்திருந்தது பஞ்சாப் அணி.
15வது ஓவர் முடிவில் 6விக்கெட் இழந்து 92ரன் குவித்தது. ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்திருந்தார்.
கடைசி ஓவரில் 32ரன் எடுக்கவேண்டியிருந்தது.லோகேஷ் ராகுல் 81ரன்னுடனும், மார்கஸ் 11ரன்னுடனும் தொடர்ந்து ஆடினர்.
மார்க்சும் விடைபெற ஆண்ட்ரூ, ராகுலுடன் ஜோடி சேர்ந்தார்.
20ஓவர் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 143ரன் எடுத்தது பஞ்சாப் அணி. 95ரன்களுடன் லோகேஷ் ராகுலும், ஆண்ட்ரு ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தினர். 15ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here