இந்திய பொருளாதாரம் சரிவு! ஐ.நா. அறிக்கை!!

மும்பை:ஜிஎஸ்டி அறிமுகம், வங்கி மோசடிகளால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. ஐ.நா.பொருளாதார அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரேநாடு ஒரே வரி என்ற கொள்கையில் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவில் கடந்தாண்டு ஜூலை 1முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் என கூறப்பட்ட இப்புதிய வரித்திட்டத்தின் நடைமுறை சிக்கல் இன்னமும் தீர்க்கப்படவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி ஆய்வுக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிக்கான ரிட்டர்ன் தாக்கல் செய்ய 6மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜிஎஸ்டி வரியால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிட்டதாக ஐ.நா.பொருளாதார அறிக்கை தெரிவித்துள்ளது.2016ல் உள்நாட்டு உற்பத்தி 7.1சதவீதம் இருந்ததாகவும், 2017ல் 6.6சதவீதமாக குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பசிபிக் பொருளாதார மண்டலங்களில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 5.8சதவீதமாக 2017ல் உள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 0.4சதவீதம் அதிகம்.இந்திய வங்கிகளில் நடந்த மோசடி தொகை 9.5ஆயிரம் கோடி ரூபாயாக தெரியவந்துள்ளது. ஆனால், இத்தொகை மேலும் அதிகமாக இருக்குமென தெரியவந்துள்ளது. இதனால் முதலீடு, வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும்.வரி சீர்திருத்தம் என்று மட்டும் கவனம்செலுத்தாமல் வரிவசூலையும் எளிமைப்படுத்தி அதிகப்படுத்தவேண்டும். இதனால் இந்தியப்பொருளாதாரம் 2018ல் 7.2சதவீதமாக வளர வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here