19வயது செல்போன் திருடன்! பைகுலா சிறையில் இருந்து எஸ்கேப்!

மும்பை: பைகுலா சிறையில் இருந்து செல்போன் திருடன் மூங்கில் கம்பை பயன்படுத்தி எளிதாக தப்பியுள்ளான்.
மும்பை நாகபடா பகுதியில் செல்போன் திருடிய வழக்கில் மஜித்ஷேக்(19) என்பவர் கைதானார்.

ரயில்வே போலீசார் அவரை கைதுசெய்தனர். பைகுலா சிறையில் கடந்த 3ம் தேதி அடைக்கப்பட்டார்.
5ம் தேதி நள்ளிரவில் மஜித் அங்கிருந்து தப்பியுள்ளார். அவரை சிறை முழுக்க தேடிய போலீசார் சிசிடிவி கேமராக்களை பரிசோதித்தனர்.

சிறையின் சுவருக்கு அருகே கிடந்த மூங்கில் கம்புகளை பயன்படுத்தி மஜித்ஷேக் சிறை சுவரை தாண்டி குதித்துள்ளது தெரியவந்தது.
மும்பை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மஜீத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here