மத்திய அரசை நம்பினால் காவிரி வராது! தமிழக அரசு நீதிமன்றத்தில் கடும் வாதம்!!

டெல்லி:காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை இம்மாதம் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
நடுவர் மன்ற தீர்ப்புதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நதிநீர் பகிர்வு தொடர்பாக திட்டம் ஒன்றை தயாரிக்க கூறியது. அதற்கு 6வாரம் அவகாசம் அளித்தது.அவகாசம் முடிந்தும் ஸ்கீம் உருவாக்குவதில் மத்திய அரசு மெத்தனம் காட்டியது.
கர்நாடகா பேரவை தேர்தல் மே12ல் நடைபெறுவதால் அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு நடந்துகொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்நிலையில், ஸ்கீம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை இன்று 8ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம்.
அதன்படி, நேற்று 109பக்க அறிக்கையை மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 10நாள் அவகாசமும் கோரப்பட்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்று ஸ்கீம் முழுவீச்சில் அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.இருப்பினும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் 14ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இன்றைய வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், மத்திய அரசை நம்பினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. உச்சநீதிமன்ற உத்தரவை சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி அமலாக்காமல் இருப்பதா? அரசியல் காரணங்களுக்காக தண்ணீர் பங்கீடு பணியை ஒத்திவைப்பதா? என்று கருத்துக்களை முன்வைத்தது.  கர்நாடக அணைகளில் 19 டிஎம்சி தண்ணீர் இருப்பதாகவும் உடனடியாக 4 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறும் வலியுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here