அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் மறுப்பு! இறந்த மனைவியை தோளில் சுமந்துவந்த கணவர்!!

உத்தரப்பிரதேசம்: பதாவுன் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டது. இதனால் மனைவியின் இறந்த உடலை தோளில் சுமந்தவாறே வீடு திரும்பினார் கணவர்.பதாவுன் நகரில் வசித்து வருபவர் சித்திக்(37). இவரது மனைவி முனிஷா(32).  முனிஷா மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று இரவு அவர் இறந்துவிட்டார்.

 

மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்துதருமாறு சித்திக் தலைமை மருத்துவரிடம் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக வேண்டுகோள் கடிதமும் கொடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீண்டநேரம் காத்திருந்து ஆம்புலன்ஸ் வராததால் மனைவி உடலை தோளில் சுமந்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தார் சித்திக்.   நீண்டதூரம் சென்ற அவர், நண்பர் ஒருவரின் வாகனத்தில் வீடு திரும்பினார்.இதுகுறித்து மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் விசாரித்தது. மருத்துவமனையில் 2 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. அவை வருவதற்கு சற்று தாமதம் ஏற்பட்டது. அதற்குள் சித்திக் அவசரப்பட்டு சென்றதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here