2.62கோடி போலி ரேசன்கார்டுகள் நீக்கம்!

சென்னை:தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ஆய்வு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கலந்துகொண்டார்.பின்னர் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொதுவினியோக திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மூலமாக நாடு முழுவதும் 2 கோடியே 62 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 6.39 கோடி பேர் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைத்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போலி ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.இதன்மூலம் மானிய உணவு பொருட்கள் உரியவர்களுக்கு சென்றடைகிறது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்னணு எந்திரம் மூலம் உணவு பொருட்கள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here