மாயா 2! இது பெண்களின் கதை!!

மும்பை: பிரபல இயக்குநர் விக்ரம் பட் பாலியல் சிறுபான்மையினருக்காக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். இவர் தயாரித்து வரும் புதிய படம் மாயா2.இதில் டிவி நடிகைகள் பிரியாள்கர், லீனாஜுமானி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் இருவரும் லிப்லாக் முத்தம் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
மே.30ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்துக்கு இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.சிம்மி என்ற பெண் தனது லெஸ்பியன் பழக்கத்தை மறைத்து திருமணமானவள். ரூகி என்ற பெண் துணிந்தவள். இவர்கள் இருவருக்கும் ஏற்படும் காதல் மாயா2.
இதனை விக்ரம்பட்டின் மகள் இயக்கியுள்ளார். இப்படத்தின் விடியோ மற்றும் படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகின்றன. இப்படத்தை விபி ஆன் த வெப் என்ற ஆப்பிலும் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here