இந்திய பாடகருக்கு குவைத்தில் அவமதிப்பு!

குவைத்: இந்தியப்பாடகரிடம் குவைத் விமானநிலையத்தில் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டது குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பாடகர் ஆதனன்சாமி. இவர் இந்தியாவில் வசித்துவருகிறார். 2005ல் இந்தியக்குடியுரிமை வேண்டி விண்ணப்பித்துள்ளார். அது பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், குவைத்தில் நிகழ்ச்சிநடத்த குழுவினருடன் சென்றார்.
அங்குள்ள விமானநிலையத்தில் இவர் பாஸ்போர்ட் புதுப்பிக்காதது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த அந்த பாஸ்போர்ட்டை பாடகர் புதுப்பிக்கவில்லை. இந்திய குடியுரிமையும் இல்லை. இதனால் அதிகாரிகள் அவர் மீது எரிந்து விழுந்தனர்.
இந்திய நாய் என்றும் திட்டியுள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு புகார் செய்தார் பாடகர். ஆனாலும், மத்திய அமைச்சர் சுஷ்மாவை தொடர்புகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து தனது ஆதங்கத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ உடனடியாக பாடகர் ஆதனன்சாமியை தொடர்புகொண்டு விபரத்தை கேட்டறிந்தார். அமைச்சர் சுஷ்மாவிடம் பேசவும் உதவியுள்ளார்.

இதனை நெகிழ்ந்துபோய் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் பாடகர்.
பாடகரிடம் விமான நிலையத்தில் கடுமையாக நடந்துகொண்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள துபாய் அரசு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here