ரோபோ உதவியுடன் தண்டுவட அறுவைசிகிச்சை!

பென்சில்வேனியா: ரோபோ உதவியுடன் தண்டுவட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளார்  இந்திய வம்சாவளி மருத்துவர் நீல் மல்கோத்ரா.பென்சில்வேனியா சமூக மருத்துவக்கழகத்தில் பணியாற்றுகிறார் நீல் மல்கோத்ரா.
அறுவை சிகிச்சை நிபுணரான இவர் எலும்புகளுக்கு நடுவே வளரும் கட்டிகளை ரோபோக்கள் உதவியுடன் அகற்றி வருகிறார்.முதுகெலும்பும் கழுத்தும் இணையும் பகுதியில் ஒரு பெண்ணுக்கு புற்றுநோய் கட்டி ஏற்பட்டுள்ளது. இது அப்பெண்ணுக்கு தெரியாது. இந்நிலையில் விபத்தில் அவர் சிக்கினார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் புற்றுநோய் கட்டியை உறுதிசெய்தனர்.டாக்டர் நீல் மல்கோத்ரா தலைமையிலான குழு ரோபோ உதவியுடன் அப்பெண்ணின் உடலில் இருந்து கட்டியை அகற்றியது. உலகில் ரோபோ உதவியுடன் செய்யப்பட்ட முதல் அறுவை சிகிச்சை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here