தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை! கர்நாடகா மீண்டும் கைவிரிப்பு!!

டெல்லி: தமிழகத்துக்கு 4 டி.எம்.சி தண்ணீரை கொடுக்க முடியாது’ என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த 3-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மே மாதத்துக்குள் கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டு, மே 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
நாளை, இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது. அந்த அறிக்கையில், ‘கடந்த 4 மாதங்களில் தமிழகத்துக்கு 14 டி.எம்.சி நீர் திறக்கப்பட்டுள்ளது.தற்போது, போதிய மழையில்லாததால் அணைகளில் நீர் இல்லை. எனவே, தமிழகத்துக்கு 4 டி.எம்.சி நீர் கொடுக்க இயலாது. மழையின்மை காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here