நீட் தேர்வுக்கு குழந்தைகளுடன் சென்ற 3தந்தைகள் பலி!

சென்னை: நீட் தேர்வு எழுத குழந்தைகளுடன் வந்த மேலும் இரு தந்தைகள் இறந்தவிபரம் தெரியவந்துள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான பொதுநுழைவுத்தேர்வு நீட் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. புதுச்சேரியில்
12மையங்களில் நீட் தேர்வு நடந்தது.

கடலூர் மாவட்டம் அங்குசெட்டி பாளையத்தை சேர்ந்த சீனிவாசன்(52). மேல்மருவத்தூரில் உள்ள தனியார்  நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மூத்தமகள் சுவாதியை நீட் தேர்வு எழுத புதுவை வேல்ராம்பட்டில்
உள்ள சாரதா கங்காதரன் கல்லூரிக்கு அழைத்து வந்தார்.மகள் தேர்வுஎழுத சென்றதும் மயங்கிவிழுந்தார். புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்
இன்றுகாலை இறந்தார்.இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஐஸ்வர்யா, நீட் தேர்வு எழுத மதுரை பசுமலைக்கு மகளை அழைத்துவந்தார்.
தேர்வு எழுதி திரும்புகையில் கண்ணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.எர்ணாகுளத்தில் மகனுடன் தேர்வுக்கு சென்ற திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி என்ற ரமேஷ் மாரடைப்பால் இறந்தார். அவர் உடல் இன்று சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here