மெசேஜ் வெடிகுண்டு ஆபத்து! வாட்ஸ் ஆப் சேவையை பாதுகாக்க டிப்ஸ்!

மும்பை:வாட்ஸ் ஆப் சேவை மற்றும் ஆண்டிராய்டு சேவையை முடக்க ‘மெசேஜ் வெடிகுண்டு’ என்ற பெயரில் புரோகிராம்கள் உலாவுகின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பலகோடி மக்கள் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்துகின்றனர்.இதேபோன்ற சேவையை பல நிறுவனங்கள் அளித்துவந்தாலும் வாட்ஸ் ஆப் பாதுகாக்கப்பட்ட மெசேஜ்களை தனியாகவும், குழுவாகவும் பகிர்ந்துகொள்வதால் அதற்கு வரவேற்பு அதிகம் உள்ளது.
வாட்ஸ் ஆப் வழியாக பேச, விடியோ சாட் செய்ய, பணம் அனுப்ப என்று புதியவசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.இவை வாட்ஸ் ஆப் மோகத்தை தொடர்ந்து அதிகரிக்கவைக்கின்றன.
இதனால் வாட்ஸ் ஆப் சேவையை முடக்க ஹாக்கர்கள் தீவிரமாக முயலுகின்றனர்.
இதற்காக அவர்கள் ‘மெசேஜ் பாம்’ என்ற பெயரில் மெசேஜ்களை அனுப்புகின்றனர்.இந்த மெசேஜ்கள் பெரும்பாலும் தனிநபரிடம் இருந்தே வருகின்றன. இந்த மெசேஜ்களில் பல பகுதிகள் மறைக்கப்பட்டு அதில் வாட்ஸ் ஆப் மற்றும் செல்போனின் ஆபரேடிங் சிஸ்டமான ஆண்டிராய்டை முடக்குவதற்கான புரோகிராம் இடம்பெற்றுள்ளது.
இத்தகைய மெசேஜை நாம் திறந்து படித்துக்கொண்டிருக்கும் போது நமது வாட்ஸ் ஆப் முடங்கிவிடும்.எனவே, தெரியாதவர்கள் அனுப்பும் மெசேஜ்களை திறந்து படிக்க கூடாது.
மெசேஜில் கூடுதல் விபரம் தெரிய மேலும் படியுங்கள் என்று கூறினால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
மெசேஜில் தேவையற்றவகையில் ஸ்பேஸ் இருந்தால் உடனடியாக மெசேஜை மூடவேண்டும்.
மெமரியில் இருந்து இதுபோன்ற மெசேஜ்களை அகற்ற வேண்டும்.
மெசேஜின் முதல் பக்கம் கருப்பு புள்ளிகளுடனோ, கருப்பாகவோ இருந்தால் புறக்கணிப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here