பாஜக பிரமுகரின் பாலியல் வன்முறை! பெண் வழக்கறிஞர் நூதன எதிர்ப்பு!!

உத்தரப்பிரதேசம்: பாஜக பிரமுகரின் பாலியல் வன்முறையை கண்டித்து பெண் வக்கீல் ஒருவர் நூதன போராட்டம் நடத்தினார்.லக்னோ உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சதீஷ் ஷர்மா என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மூன்று ஆண்டுகளாக மனரீதியாக துன்புறுத்தியதாகவும் புகார் இப்பெண் வக்கீல் புகார் அளித்துள்ளார். அதன்மீது மாநில பார்கவுன்சில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால்அந்த பெண் வழக்கறிஞர், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனது தலையை மொட்டை அடித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மூத்த வழக்கறிஞரும், பா.ஜ.க பிரமுகருமான சதீஷ் ஷர்மா என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்தார்.என்னுடைய தலைமுடி பாதியை அவர் வெட்டினார். அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எனது குடும்பத்தினரை மிரட்டுகிறார். அவர் மீது வழக்கறிஞர் சங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here