விவசாய கடன் தள்ளுபடி! இலவச மின்சார திட்டம்! மஜத தேர்தல் அறிக்கை!!

பெங்களூர்:கர்நாடக பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. மே.12ம் தேதி கர்நாடகா தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.இத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத என்று மும்முனைப்போட்டிநிலவுகிறது.
மற்ற இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியாகிவிட்ட நிலையில் மஜதவின்
தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாவன: விவசாயக்கடன் முழுவதும் தள்ளுபடிசெய்யப்படும். பதவிக்கு வந்த ஒரேநாளில் இதனை செயல்படுத்துவோம்.
மேலும், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சனைகளை விரைந்து தீர்க்க ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 2விவசாயிகள் அடங்கிய ஆலோசனைக்கமிட்டி உருவாக்கப்படும்.கர்ப்பிணி பெண்களுக்கு 8வது மாதம் தொடங்கி குழந்தை பெற்று 3மாதங்கள் வரை மாதம் ரூ.6ஆயிரம் வழங்கப்படும். கிராமங்களில் வசிக்கும் ஏழைக்குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். முதியோருக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படும்.
ஏழைக்குடுபங்களுக்கு மாதம்தோறும் 30கிலோ அரிசி ரேஷனில் வழங்கப்படும்.
உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இத்தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here