துபாயில் இருந்து 100 ஐபோன் கடத்தல்! டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல்!!

டெல்லி: துபாயில் இருந்து 100 ஐபோன்களை கடத்தி வந்தவர் பிடிபட்டார். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.துபாயில் இருந்து வந்த அமந்தீப்சிங்(53) என்பவர் உடைமைகளை பரிசோதித்தனர்.
அப்போது அவர் பையில் புதிய ரக ஐபோன்10 செல்போன்கள் அதிகளவில் இருந்தன.அவற்றுக்கான உரிமங்களை அதிகாரிகள் கேட்டனர். அவர் திணறினார்.
இதனைத்தொடர்ந்து அவரிடமிருந்த 100போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.86லட்சம் ஆகும். டெல்லியில் வசித்துவரும் அமந்தீப் சிங் கைதுசெய்யப்பட்டார்.துபாயில் தற்போது விழாக்கால தள்ளுபடிகள் ஐபோன் மீது அளிக்கப்படுகிறது.
எனவே, அங்கே ரூ.19ஆயிரம் குறைவாக ஐபோன் கிடைக்கிறது. அதனால் 100போன்கள் வாங்கி இந்தியாவில் விற்க திட்டமிட்டேன் என்று அமந்தீப்சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here