தனிநபர் டேட்டா பாதுகாப்பு!! மைக்ரோசாப்ட் தீவிர கவனம்!!

சியாட்டில்: தனிமனிதர் குறித்த டேட்டாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் மனித உரிமையாக கருதி அதனை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது என்றார் சத்யா நாதெல்லா.
சியாட்டில் நகரில் உள்ள வாஷிங்டன் சமூக மையத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 3நாள் டெவலப்பர் மாநாடு தொடங்கியது.


விழாவில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா பேசியதாவது:
தனிநபர்களது தகவல்கள் அவர்களது அந்தரங்கமானவை. அவை மனித உரிமைகள்.
அவற்றை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். அதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.மேகக்கணினி தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக வளர்ந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் அது பயன்பட்டு வருகிறது.
கம்ப்யூட்டர்களை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்துவது புதிய ஆச்சர்ய அனுபவங்களை தந்து வருகிறது. அதேவேளையில் அதற்கான பொறுப்புணர்வுடன் செயல்படவும் வேண்டியுள்ளது. இத்தொழில்நுட்பத்தின் ஊடாக வேலைவாய்ப்பையும் பெருக்க வேண்டியுள்ளது.மேகக்கணினி துறையில் தனிநபர் விபரங்கள் கசியாமல் அவர்களது தகவல்கள் பாதுகாப்புடன் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
சைபர் செக்யூரிட்டியில் அரசியல், ஜனநாயக அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி பாதுகாப்பை உலகளவில் உறுதிசெய்து வருகிறோம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக்கொண்டு சட்டப்பூர்வமாக செய்யவேண்டியதை மட்டும் செய்யவும், அதற்கான உபகரணங்களை எந்தஒரு சார்பும் இல்லாமல் உருவாக்கி வருகிறோம்.
உலகின் கம்ப்யூட்டராக செயல்படும் மைக்ரோசாப்ட் அசூர், மைக்ரோசாப்ட் 365 ஆகிய இரு ப்ளாட்பார்ம்களை இதற்காக உருவாக்கியுள்ளோம்.
அவற்றில் புரோகிராம்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை இந்த 3நாள் கருத்தரங்கு உங்களுக்கு ஏற்படுத்தி தரும்.
உங்களின் வெற்றி எங்களது வெற்றி. இவ்வாறு சத்யநாதெல்லா பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here