செல்போனில் ஆபாசப்படம்! பேராசிரியரை தாக்கிய மாணவிகள்!!

பாட்டியாலா: சாமன் லால் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள அரசு மகளிர் கல்லூரியல் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். தன்னிடம் படிக்கும் மாணவிக்கு இரட்டை அர்த்த குறுஞ்செய்தி அனுப்பியதையடுத்து கல்லூரி முதல்வர் பேராசிரியரை கண்டித்துள்ளார்.இதையடுத்து பேராசிரியர் மாணவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அன்று இரவே பேராசிரியர் மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உன் பெற்றோருக்கு நல்ல வேலை வாங்கி தருகிறேன். நாம் இருவரும் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி தொந்தரவு செய்துள்ளார்.தாயுடன் கல்லூரிக்கு வந்த மாணவி பேராசிரியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். மேலும் பேராசிரியரை இருவரும் தாக்கியுள்ளனர். பின்னர் கல்லூரி முதல்வர் அறைக்கு அவரை இழுத்து சென்றனர்.இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் சிரஞ்சீவி கவுர், பேராசிரியர் பணியட மாற்றம் அல்லது பணியிலிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here