வாக்காளர்களை கட்டி தூக்கிவாருங்கள்! பாஜக தொண்டர்களுக்கு திடீர் கட்டளை!!

பெங்களூர்:தேர்தல் நாளன்று ஓட்டுப்போடாமல் இருப்பவர்களை கை,கால்களை கட்டித்தூக்கி வாருங்கள். அவர்களை பாஜகவுக்கு ஓட்டுப்போட வையுங்கள் என்று தெரிவித்துள்ளார் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா.கர்நாடகா பேரவை தேர்தல் மே.12ல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
பெல்காமில் பேசிய எடியூரப்பா, தொண்டர்கள் பாஜக வெற்றிக்கு தீவிரமாக பாடுபடவேண்டும் என்றார்.யாராவது ஓட்டுப் போடவில்லை என்று தெரிந்தால், கை கால்களைக் கட்டி தூக்கி வந்து பாஜகவுக்கு ஓட்டுப் போட வையுங்கள்.
முதல்வர் சித்தராமையா போட்டியிடும் சாமுண்டி மற்றும் பாதாமி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைவார். காங்கிரஸ் தற்போது மூழ்கி கொண்டிருக்கும் கப்பல். அதனால் அனைத்து வாக்காளர்களும் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.
இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here