உணவு சாப்பிட மறுத்த குழந்தைக்கு சூடு!

ஒடிசா: உணவு சாப்பிட மறுத்த  4 வயது குழந்தைக்கு உறவினர் வீட்டில் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா பெர்காம்பூர் பகுதியை சேர்ந்த தம்பதி  தஸ்ரதி மஜ்ஜி, ரண மஜ்ஜி இவர்களின் குழந்தை சஞ்சனா மஜ்ஜி.
விடுமுறை காரணமாக  சஞ்சனாவை  நண்பர்  வீட்டில் விட்டு பெற்றோர் வேலைக்கு சென்றனர். சஞ்சனா உறவினர் வீட்டில் சாப்பிட மறுத்துள்ளது.
உறவினர்கள் இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர். குழந்தையை உறவினர் வீட்டிலிருந்து அழைத்து செல்ல வந்த  பெற்றோர் குழந்தைக்கு இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here