நீட் தேர்வு எழுத மகனை அழைத்துச்சென்றவர் பலி!

எர்ணாகுளம்: நீட் தேர்வு எழுத மகனை அழைத்துச்சென்றவர் மாரடைப்பால் இறந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மகன் தேர்வெழுதினார்.மருத்துவக்கல்லூரி பொதுநுழைவுத்தேர்வான நீட் இந்த ஆண்டு அறிமுகமாகி உள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்கள் 5 ஆயிரம் பேருக்கு கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியைச்சேர்ந்த சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம். இவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.கிருஷ்ணசாமி தனது மகனுடன் எர்ணாகுளம் சென்றார். ஞாயிறு காலை மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் மரணடைந்தார். தந்தை மரணமடைந்தது தெரியாமல் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதி வருகிறார்.கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.3லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அவர் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

தேர்வுமுடித்து வந்த மாணவர் தந்தை இறந்தது தெரியவந்து கதறி அழுதார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here