Connect with us

Sports

சொந்த மண்ணில் மும்பை அணி வெற்றி!

Published

on

மும்பை: ஐபிஎல் போட்டியின் 37வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.
முதலில் களமிறங்கிய மும்பை அணி 4விக்கெட் இழந்து 181ரன் எடுத்தது.மும்பை அணியில் தொடக்க வீரர்களாக சூர்யகுமார், எவின் லூயிஸ் களமிறங்கினர்.
சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடி 93வது ரன்னில் 10வது ஓவரில் பிரிந்தது.
சூர்யகுமாருடன் ரோஹித்ஷர்மா ஜோடியானார்.
13, 15,16,17வது ஓவர்களில் விக்கெட்கள் விழுந்தன.
20ஓவர் முடிவில் 181ரன் எடுத்திருந்தது.தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியில் கிறிஸ்லின், ஷூப்மான் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்.
கில் 7ரன்களிலும், கிறிஸ்லின் 17ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.ராபின் உத்தப்பா-நிதிஷ்ராணா ஜோடி சிறப்பாக ஆடியது. ராபின் 54வது ரன்களிலும், நிதிஷ் 31ரன்னிலும் களம் திரும்பினர்.
தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தன. 20ஓவர் முடிவில் 168ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா.
மும்பை இந்தியன்ஸ் அணி 13ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator