விடிய விடிய பணியாற்றிய ஐகோர்ட் நீதிபதி!

மும்பை: மும்பை ஐகோர்ட்டு நீதிமன்றத்தில் கோடை விடுமுறை தொடங்கியது.
நீதிபதிகள் அவசரமான மற்றும் முக்கியமான வழக்குகளை விசாரித்தனர். பெரும்பாலான நீதிபதிகள் தங்கள் பணி நேரம் முடிந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.
நீதிபதி ஷாருக் ஜே.கதாவல்லா இரவிலும் பணியை தொடர்ந்தார். அதிகாலை 3½ மணி வரை நீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பணிபுரிந்தார். நீதிபதியின் இந்த செயல்பாடு பல்வேறு தரப்பினர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நீதிபதி ஷாருக் ஜே.கதாவல்லா நீண்ட நேரம் பணிபுரிவது புதிதல்ல. ஏற்கனவே முக்கியமான வழக்குகள் வரும்போது நள்ளிரவு வரை வழக்கு விசாரணையில் ஈடுபடுவார் என்று மும்பை ஐகோர்ட்டு வக்கீல்கள் தெரிவித்தனர்.
இரவு நீண்ட நேரம் பணியாற்றினாலும்  காலையில் சரியாக 10 மணிக்கு கோர்ட்டுக்கு வந்து வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் எனவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here