நீட் தேர்வு எழுத வந்தோருக்கு உதவிய மசூதி நிர்வாகம்!

ஆலுவா: நீட் தேர்வு எழுதவந்த மாணவர்களை அரவணைத்துக்கொண்டது கேரளாவில் உள்ள மசூதி நிர்வாகம்.
மருத்துவக்கல்லூரிக்கான பொதுநுழைவுத்தேர்வு நீட் இன்று நடைபெற்றது.கேரளமாநிலத்தின் முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இருந்தும் பல மாணவர்கள் இத்தேர்வு எழுத கேரளா சென்றனர்.
ஆலுவா நகரில் உள்ள நீட் தேர்வு மையத்தின் அருகே மசூதி ஒன்று உள்ளது.

இம்மசூதி வடிஹூடா அறக்கட்டளை என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது.
மாணவர்கள், அவர்கள் உடன் வந்தவர்கள் மசூதியினுள் தங்க அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி செய்து தரப்பட்டன.
கடந்த ஆண்டும் இம்மசூதியில் இதேபோன்று போட்டித்தேர்வு எழுத வந்தவர்களுக்கு உதவி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here