ஜியோவின் அடுத்த அதிரடி!! மாதந்தோறும் 1100ஜிபி இலவசம்!

மும்பை: பிராட்பேண்ட் சேவையை முக்கிய நகரங்களில் துவக்க உள்ளது ஜியோ. மாதம் 1100ஜிபி டேட்டா இலவசமாக அளிக்க உள்ளது.
4ஜி சேவையில் முன்னணி வகிக்கிறது முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோ.
இந்நிறுவனம் பிராட்பேண்ட் சேவையில் இறங்கவுள்ளது.கண்ணாடி இழை வழியாக இணைய இணைப்பை இச்சேவையில் தரவுள்ளது.
முதற்கட்டமாக அகமதாபாத், ஜாம்நகர், மும்பை, டெல்லியில் இந்த சேவை தொடங்கப்படுகிறது.சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
நொடிக்கு 100மெகாபைட்ஸ் வேகத்தில் 100ஜிபி டேட்டா வழங்கவும். அதிகபட்சமாக மாதந்தோறும் 1100ஜிபி(1.1டெராபைட்) டேட்டா வழங்கவும் ஜியோ திட்டமிட்டுள்ளது.வேகம், பயன்படுத்தும் டேட்டா அளவு அடிப்படையில் 3வகை திட்டங்களை ஜியோஜிகா பைபர் அறிமுகப்படுத்த உள்ளது. முதல் 3மாதங்கள் இலவச சேவை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here