ராஜஸ்தானை பதம் பார்த்தது பஞ்சாப்!!

இந்தூர்:ஐபிஎல் 38-வது லீக் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு செய்தது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்கி ஷார்ட் (2), ரகானே (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பட்லர் சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.சஞ்சு ஜாம்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (12), ராகுல் திரிபாதி (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரன் குவிக்க இயலவில்லை. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியில் கெய்ல், ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4வது ஓவரில் கெய்ல் அவுட்டானார். 5வது ஓவரில் கருண் களம் திரும்பினார்.
13வது ஓவர் முடிவில் 3விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி 87ரன் எடுத்திருந்தது.
19வது ஓவரில் 6விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here