ஆப்கனில் இந்திய இன்ஜினியர்கள் கடத்தல்!!

காபூல்: ஆப்கானிஸ்தான் மின் நிலையத்தில் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கு பணியாற்றிவந்த 7 இந்திய இன்ஜினியர்களை கடத்திச்சென்றனர்.பாக்லன் மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
மின்நிலையத்துக்கு பஸ்சில் வந்துகொண்டிருந்த இன்ஜினியர்கள் திடீரென நிறுத்தப்பட்டனர். பஸ்சுடன் அவர்கள் கடத்திச்செல்லப்பட்டனர்.கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் மேற்கொண்டுள்ளது.
அக்டோபர் மாதம் ஆப்கனில் தேர்தல் நடைபெறும் நிலையில் இக்கடத்தல் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here