பாகிஸ்தான் கொடியுடன் சிறுமி ! பீகார் அரசு புத்தகத்தால் சர்ச்சை!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட புத்தகத்தில் பாகிஸ்தான் கொடிவரையும் சிறுமி இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.அம்மாவட்டத்தில் உள்ள ஜமுய் மாவட்ட பள்ளி குழந்தைகளுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 40000 புத்தகங்கள் வழங்கப்பட்டன.புத்தகத்தின் அட்டைப்படத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி அந்நாட்டின் கொடியை வரைவது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பதிலளித்துள்ள அதிகாரி, அப்படம் யுனிசெப் அமைப்பு பாகிஸ்தானில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.
படத்தில் குழந்தை பாகிஸ்தான் கொடியை வரைபடமாக வரைந்திருப்பதை கவனிக்கவில்லை. இது தவறுதலாக நேர்ந்த பிழை என்று கூறியுள்ளார்.இப்புத்தகம் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கிய பின்னரே அச்சிட்டதாக, அச்சகமும் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகத்தின் சர்ச்சைக்குரிய படம் நீக்கப்பட்டு புதிய புத்தகங்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here