18வயது பெண்கள் சுதந்திரமாக வாழலாம்!!

திருவனந்தபுரம்:கேரளாவை சேர்ந்த நந்தகுமார் என்பவர் துசாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
துசாராவுக்கு 18 வயது முடிவடைந்திருந்தது. நந்தகுமாருக்கு 21 வயது முடியவில்லை.இவர்களது திருமண வயதை காட்டி திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என துசாராவின் தந்தை கேரள உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்தது. இருவரும் கணவன் மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். மகளை நந்த குமாரிடம் இருந்து பிரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு துசாராவின் தந்தை மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூ‌ஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஒரு ஆணும், பெண்ணும் திருமண வயதை எட்டிவிட்டால் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்வது குற்றமாகாது.பெண் 18 வயது நிரம்பி விட்டாலே ஒரு ஆணோடு திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழலாம். ஆணுக்கு திருமண வயது வரவில்லை என்றாலும் கூட இருவரும் சேர்ந்து வாழ்வதை குற்றமாக கருத முடியாது என தெரிவித்ததுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here