கள்ளக்காதலில் ஈடுபட்டதால் விபரீதம்! வாலிபர் கொலை!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உடையநாச்சியை சேர்ந்தவர்கள் அன்பழகன் விஜயா தம்பதியினர். அன்பழகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.சில நாட்களுக்கு முன் ஊருக்கு திரும்பிய அன்பழன் தனது மனைவிக்கும் அதே ஊரை சேர்ந்த மணிவேல் என்பவருக்கும் கள்ளக்காதல் இருக்கும் விசயத்தை தெரிந்துக் கொண்டார்.இது குறித்து விஜயாவையும் மணிவேலையும் எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதையடுத்து மணிவேலை கொலை செய்ய நெய்வேலி கூலிப்படை வீரமணியிடம் ரூ. 10 லட்சம் பேசி முன்பணம்
கொடுத்துள்ளார்.விழுப்புரம் வந்த கூலிப்படையினர் உச்சிமேடு கிராமம் செல்லும் வழியில் மணிவேலை வெட்டி கொலை செய்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் கொலையாளிகளை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களை கைது செய்த போலீசார் வீரமணியை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here