நிருபரை தாக்கிய காவலர் ஆறுமாதம் சஸ்பெண்ட்!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஆளமரத்துர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் மாலை நாளிதழ் நிருபராக பணியாற்றி வருகிறார்.நேற்று குடும்பத்தினருடன் சேலம் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பெரும்பாலையில் வாகனசோதனை நடந்து கொண்டிருந்தது. தலைமை காவலர் சக்திவேல் ஸ்ரீதரன் காரை நிறுத்தி சேதானை செய்துள்ளார்.நிருபர் என அறிமுகப்படுத்திக் கொண்டார் ஸ்ரீதரன். அதையடுத்து லஞ்சம் வாங்கியதாக எஸ்பியிடம் என்னை பற்றி கூறியது நீதானா என காவலர் சக்திவேல் கடுமையான வார்த்தைகளால் திட்டி நிருபர் ஸ்ரீதரனை தாக்கியுள்ளார்.படுகாயமடைந்த ஸ்ரீதரன் தர்மபுரி அரசு மருத்துவனயில்சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நிருபரை கடுமையாக தாக்கிய காவலர் சக்திவேல் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here