நீட் தேர்வு குறித்து வானொலி ஒலிபரப்பு! ஹிந்தி மொழி ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச்சாட்டு!!

டெல்லி: நாடு முழுவதிலிருந்தும் சுமார் 13 லட்சம் பேர் நாளை நீட் மருத்தவ தேர்வு எழுத இருக்கின்றனர். இதற்கான நுழைவு சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தவர்களுக்கு அகில இந்திய வானொலியில் நீட் தேர்வு குறித்த மாணவர்களின் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கப்படும் என் தெரிவித்து இருந்தது.மதியம் 1 மணியவில் தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் ரேடியோ கேட்ட மாணவர்கள் நிகழ்ச்சி ஹிந்தியில் ஒலிப்பரப்பானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெற்றதால் தமிழக மாணவர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை என மாணவர்கள் கூறினர்.
இது குறித்து தேர்வர்களின் பெற்றோர் கூறுகையில் நீட் தேர்வில் ஹிந்தி மொழி ஆதிக்கம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here