கர்நாடகா தேர்தலில் பெற்றோர் வாக்களித்தால் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண்!

பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ம் தேதி நடக்கிறது.
இதில் வாக்களிக்கும் பெற்றோர்கள் விரலில் வைக்கப்பட்ட மையை பள்ளியில்
காண்பிக்க வேண்டும்.தந்தை சார்பாக இரண்டு மதிப்பெண்களும், தாய் சார்பில் இரண்டு மதிப்பெண்கள் என
மொத்தம் நான்கு மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.இதை கர்நாடக ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடகா மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மை கழக பொதுச்செயலாளர் சசிகுமார் கூறுகையில், பெற்றோர் தங்களது மையிட்ட விரலை பள்ளியில் காண்பிக்க வேண்டும்.அதன் அடிப்படையில் இன்டர்னல் அசஸ்மென்ட் மதிப்பெண் வழங்கும்போது
4 மதிப்பெண் கூடுதலாக மாணவர்களுக்கு வழங்கப்படும். அனைவருக்கும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். வாக்களித்த பெற்றோர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here