காதலியை பெண் கேட்டு சென்றவர் தீயில் கருகி பலி!

சென்னை: திருத்தணி அதிமுக நகர்மன்ற முன்னாள் செயலர் சௌந்தரராஜனின் மகள் அஸ்வினியும் வேலூர் புளியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராகேஷ் என்பவரும் காதலித்து வந்தனர். ராகேஷ் மும்பை கடற்படையில் பணியில் இருந்தார்.இந்நிலையில் அஸ்வினிக்கு அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதையறிந்த ராகேஷ் குடும்பத்தாருடன் பெண் கேட்டு அஸவினியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இரு தரப்பினருடன் ஏற்பட்ட தகராறில் ராகேஷை தீ வைத்து
எரித்துள்ளதாக கூறப்படுகிறது.தீக்காயங்களுடன் ராகேஷ் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ராணுவ மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராகேஷின் மரணத்திற்கு காரணமாக அஸ்வினி குடும்பத்தார் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என ராகேஷ் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here