பாஜகவுக்கு பெண்கள் சக்தி முக்கியம்!

பெங்களூர்:பாஜகவுக்கு பெண்கள் சக்தி முக்கியம் என்று தெரிவித்தார் பிரதமர் நரேந்திரமோடி.
நமோ ஆப் வழியாக பாஜக மகளிர் அணியினரிடம் இன்று அவர் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:பெண்கள் தலைமையில் முன்னேற்றம் என்ற நிலையை நோக்கி உயர்ந்துள்ளது நம் நாடு.
நாட்டின் முன்னேற்றத்துக்காக மட்டுமின்றி நமது கட்சியும் இந்த மந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது.
பாஜகவுக்கு பெண்கள் சக்தியே முக்கியம்.ஒரு அமைப்பிலோ, அரசாங்கத்திலோ அல்லது திட்டங்கள் வகுப்பதிலோ, நாம் பெண்களுக்கே முதலிடம் அளித்து வருகிறோம். பாஜக அமைச்சரவையிலும் இது பின்பற்றப்படுகிறது.
ஒவ்வொரு பாஜக பெண் தொண்டரும் தங்களது வாக்குச்சாவடிகளில் பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டும்.
இதற்கு, கர்நாடக காங்கிரஸ் அரசின் தவறான வாக்குறுதிகளையும் செயல்பாடுகளையும் மக்களிடம் விளக்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில், மக்கள் ஒவ்வொருவரையும் இணைக்க வேண்டும் என்றார்.
மறைந்த பாஜக வேட்பாளருக்கு தனது அஞ்சலியையும் செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here