டுவிட்டர் பயனாளிகளே உஷார்! பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள்!!

அமெரிக்கா: டுவிட்டரை பயன்படுத்தும் அனைவரும் உடனடியாக தங்கள் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.சமூக ஊடகமான டுவிட்டரை நாடு முழுவதும் 300மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிறுவன பயனாளர்களின் தகவல் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், தகவல் திருட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது.பொது இடங்களில் இணையத்தை பயன்படுத்துவோரிடம் இருந்து பாஸ்வேர்டை தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு புரோகிராம்-பக் கொண்டுவரப்பட்டிருந்தது.
அந்த புரோகிராமை முடக்கிவிட்டோம். டுவிட்டர் பயன்படுத்தும் 300மில்லியன்பேரின் தகவல்களும் மிகவும் முக்கியமானவை. தனிநபர் சுதந்திர உரிமையுடையவை. எனவே, அதனை பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

மற்றவர்கள் எளிதில் ஊகிக்கமுடியாத வண்ணம் கடுமையான பாஸ்வேர்டாக இருக்கவேண்டும்.
பாஸ்வேர்டுகளை குறிப்பிட்ட கால இடைவேளையில் மீண்டும் மாற்றிக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு டுவிட்டர் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here