பாலத்தை வெடிவைத்து தகர்த்த மாவோயிஸ்ட்டுகள்!

ஐதராபாத்: தெலுங்கான மாநில எல்லையோரம் உள்ள சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநில மாவோயிஸ்ட்டுகளை பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டு வருகின்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தெலுங்கான மாநிலம் கம்மம் மாவட்டம் செர்லா பகுதியில் பத்ராசலம், செர்லா செல்லும் பாலத்தை மாவோயிஸ்ட்டுகள் வெடி வைத்து தகர்த்துள்ளனர்.
அதிகாலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பாலம் வெடி வைத்து தகர்த்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here