இந்திய பங்குச்சந்தைகள் வேலை நேரம் நீட்டிப்பு!

மும்பை:இந்திய பங்குச்சந்தைகளின் வேலை நேரம் இரவு 11.15வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்திய பங்குச்சந்தைகள் தற்போது காலை 9.15க்கு துவங்கி மாலை 3.30வரை இயங்குகின்றன.
இந்நேரத்தில் பங்குகள், பியூச்சர் வர்த்தகங்கள் நடைபெறுகின்றன.
தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தைகளில் வெளிநாட்டினர் முதலீடு செய்ய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.எனவே சந்தையில் ரிஸ்க் நிர்வாகம், செட்டில்மெண்ட், யார் எவ்வளவு வாங்கியுள்ளனர் என்பதை துல்லியமாக தெரிந்துகொள்வது உள்ளிட்ட வர்த்தக மேலாண்மை விஷயத்துக்காக வேலை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனை பரிசீலித்த செபி அமைப்பு பங்குச்சந்தைகளின் வேலை நேரத்தை காலை 9மணிக்கு துவங்கி இரவு 11.15வரை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.
கமாடிட்டி சந்தைகளும் இதேநேரத்தில் இயங்கும்.
அக்டோபர் 1ம் தேதிமுதல் புதிய வேலைநேரத்தில் சந்தைகள் இயங்க தொடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here