கரடியுடன் செல்பி! விபரீத ஆசையால் இளைஞர் பலி!!

புவனேஷ்வர்: கரடியுடன் சேர்ந்து செல்பி எடுக்கும் ஆசையால் பரிதாபமாக உயிரிழந்தார் ஒரு இளைஞர்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. டிரைவர் பணி செய்து வருகிறார். புதன்கிழமையன்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேனில் வனப்பகுதி வழியாக சென்றுள்ளனர்.
வழியில் கரடியை ஒன்றை பார்த்துள்ளனர்.வாகனத்தில் இருந்து இறங்கி கரடியுடன் செல்பி எடுக்க டிரைவர் பிரபு பட்டாரா முயற்சி செய்துள்ளார். உடனிருந்தவர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.
செல்பி எடுக்க முயற்சி செய்தபோது நிலைதடுமாறி விழுந்தார். கரடி பிரபுவை தாக்கியது அதனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அருகில் இருந்தவர்களும் பிரபுவை காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால், பிரபு பட்டாரா கரடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளர். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here