Connect with us

india

ராஜஸ்தான் கிராமத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு திருமண நிகழ்ச்சி!

Published

on

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் சம்பல் ஆற்றங்கறையில் அமைந்துள்ளது ராஜ்காட் என்ற கிராமம். சாலைவசதி குடிநீர் மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த கிராமத்தில் 350 பேர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள ஆரம்பப் பள்ளியில் ஒரு சில மாணவா்களே படிக்கின்றனர். அடிப்படை வசதி ஏதும் இல்லாத இந்த கிராமத்திலிருந்து யாரும் பெண் கொடுப்பதுமில்லை எடுப்பதுமில்லை.ஜெய்ப்பூர் சவாய்மேன் சிங் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் டோல்பூர் கிராமத்தை சேர்ந்த அஸ்வனி பராசர் என்ற மாணவர் இந்த கிராமத்தின் நிலைக்குறித்தும், பல வருடங்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.இதையடுத்து 23 வயதான பவன்குமார் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 22 ஆண்டுகள் கழித்து இந்த திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator