ஏரியில் குதித்து தந்தை, மகனை மீட்டார்! போலீஸ்காரருக்கு குவியும் பாராட்டு!!

சென்னை: போரூர் ஏரியில் விழுந்து உயிருக்குப்போராடிய இருவரை துணிவுடன் நீரில் குதித்து காப்பாற்றினார் போக்குவரத்து போலீஸ்காரர். அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

பூந்தமல்லியைச் சேர்ந்தவர் ஜெமினி. தனது மனைவி ஜெயந்தி, மகன் அசோக் ஆகியோருடன் டூவிலரில் போரூர் சென்று கொண்டிருந்தார். வாகனம் போரூர் ஏரி பாலத்தின் மீது சென்றபோது திடீரென நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதியது. வாகனம் ஓட்டி வந்த ஜெமினியும் மகன் அசோக்கும் ஏரியில் விழுந்து உயிருக்கு போராடினர் .

அதை பார்த்த அப்பகுதியில் போக்குவரத்து பணியிலிருந்த காவலர் வெங்கடேசன் ஏரியில் உடனடியாக குதித்தார். உயிருக்கு போராடிய தந்தை, மகனை மீட்டார்.
காயமுற்ற ஜெமினி, அசோக் இருவரையும் சிகிச்சைக்ககாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிருக்கு போராடிய தந்தை, மகனை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போக்குவரத்து காவலர் வெங்கடேசனை, உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here