ஏழைகளுக்கு செல்போன்! மாணவருக்கு லேப்-டாப்!! பாஜக தேர்தல் அறிக்கை!!

பெங்களூர்: ஏழை குடும்பங்களுக்கு செல்போன், கல்லூரி மாணவர்களுக்கு செல்போன், விவசாய கடன் தள்ளுபடி என்று வர்ணஜாலங்கள் நிறைந்ததாக உள்ளது பாஜகவின் தேர்தல் அறிக்கை.கர்நாடக பேரவை தேர்தல் களைகட்டியுள்ளது. பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.
60பக்க தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.ஒரு லட்சம் வரை விவசாயக்கடன் கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் வாங்கியிருந்தால் தள்ளுபடி செய்யப்படும்.ஆட்சி அமைந்ததும் அமைச்சரவையின் முதல் ஒப்புதல் இதற்காக பெறப்பட்டு நிறைவேற்றப்படும்.
விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு உயர்த்தி வழங்கப்படும்.விவசாய நண்பன் என்ற தனித்துறை அமைத்து முதல்வர் அலுவலகத்தின் மேற்பார்வையில் இயங்கும். விவசாயம், விவசாயிகளுக்கான அனைத்து
துறைகளின் திட்டங்களையும் இப்புதிய துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு நிர்வகிக்க்ப்படும்.
விவசாய தொழில்நுட்பங்களை கற்றுவர ஆண்டுதோறும் ஆயிரம் விவசாயிகள் சீனா, இஸ்ரேலுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள்.மாவட்டம், தாலுகா தலைநகரங்களில் பெண்கள் நடத்தும் கூட்டுறவு கடைகள் திறக்கப்படும். இதற்காக ரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
கல்லூரியில் சேரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
கர்நாடகா பசுவதை தடுப்புச்சட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
பெங்களூரில் பெண்கள் பாதுகாப்புக்காக பறக்கும் படை அமைக்கப்படும்.பெங்களூர் ஏரிகள், நீர்நிலைகள் புனரமைக்க ரூ.2500கோடி ஒதுக்கப்படும். குப்பையில்லா நகரமாகும்.
பெங்களூரில் மாநகர போக்குவரத்து சேவை இருமடங்கு விரிவாக்கப்படும்.
உள்ளிட்ட அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here