அரசு மருத்துவர்களின் அலட்சியம்! தடுப்பூசி போட்ட குழந்தை இறப்பு!!

சென்னை: சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கோபி லோகேஸ்வரி ஆகியோரின் 5 வயது மகள் தனிஷ்கா. 5 வயதிற்கான அம்மை தடுப்பூசி போட ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு சென்றார்.அங்கு குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தடுப்பூசி போடப்பட்ட சில நிமிடங்களில் தனிஷ்காவுக்கு கண் எரிச்சல் முகம் வயிறும் வீக்கம் ஏற்பட்டுள்ளது.அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.ஆத்திரம் அடைந்த பெற்றோர் மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக
தனிஷ்காவின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவம் குறித்து ஏழுகிணறு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் போரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here